மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விவரம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விவரம்


தமிழகத்தில் ஒரேநாளில் 6,972 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் 6வது நாளாக 6 ஆயிரத்தை கடந்து கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 61,342 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 6,993 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். 59வது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்க எண்ணிக்கையில் உயிரிழப்பு பதிவாகி உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 3,659 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்த மேலும் 4,707 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,66,956 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 59,584 பேருக்கும், இதுவரை 23,83,664 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 61,153 மாதிரிகளும், இதுவரை 24,75,866  மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.  
சென்னையில் மேலும் 1,107 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 25வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.  சென்னையில் மொத்த பாதிப்பு 96,438. சென்னையை தவிர்த்து, இன்று, விருதுநகரில் 577 பேருக்கும், திருவள்ளூரில் 486 பேருக்கும், திருநெல்வேலியில் 387 பேருக்கும், தூத்துக்குடியில் 381 பேருக்கும், செங்கல்பட்டில் 365 பேருக்கும், மதுரையில் 346 பேருக்கும், தேனியில் 283 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்  விவரம்
அரியலூர் 2
செங்கல்பட்டு 249
சென்னை 769
கோயம்புத்தூர் 296
கடலூர் 15
தருமபுரி 69
திண்டுக்கல் 51
ஈரோடு 3
கள்ளக்குறிச்சி 100
காஞ்சிபுரம் 311
கன்னியாகுமரி    0
கரூர் 19
கிருஷ்ணகிரி 21
மதுரை 73
நாகப்பட்டினம் 9
நாமக்கல் 29
நீலகிரி 50
பெரம்பலூர்    8
புதுக்கோட்டை  63
ராமநாதபுரம் 47
ராணிப்பேட்டை 418
சேலம் 63
சிவகங்கை 71
தென்காசி 68
தஞ்சாவூர் 171
தேனி 213
திருப்பத்தூர் 38
திருவள்ளூர் 303  
திருவண்ணாமலை 16
திருவாரூர் 88
தூத்துக்குடி 319
திருநெல்வேலி 87
திருப்பூர் 56
திருச்சி 63
வேலூர் 53
விழுப்புரம் 81
விருதுநகர் 413
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்     2
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)  0
ரெயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0
மொத்தம் 4,707

No comments:

Post a comment