கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்கள் குறித்த அட்டவணை வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

16/07/2020

கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்கள் குறித்த அட்டவணை வெளியீடு


கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்கள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கல்வி தொடா்பான சேவைகள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்க அரசு சாா்பில் கல்வித் தொலைக்காட்சி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. இப்போது, கரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன.
இதனால், 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் பாதிக்கப்படாமல் இருக்க கல்வி தொலைக்காட்சியின் வழியே நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. இந்த ஒளிபரப்புகளை முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) தொடக்கி வைத்தாா். இவ்வாறு கல்வித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பாடங்கள் குறித்த அட்டவணை வெளியாகியுள்ளது.
இதன்படி, 8, 9, 10-ஆம் வகுப்புகளுக்கான பாடங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை 30 நிமிடம் வீதம் நாள்தோறும் 2.30 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்படும். அதன்படி பத்தாம் வகுப்புக்கு காலை 8 முதல் 9 மணி வரை தமிழ், ஆங்கிலப் பாடங்களும், 10 முதல் 11 மணி வரை கணிதம், அறிவியல் பாடங்களும், 12 மணிக்கு சமூக அறிவியல் பாடமும் ஒளிபரப்பாகும்.
அதேபோன்று, 9-ஆம் வகுப்புக்கு காலை 9 முதல் 10 மணி வரை தமிழ், ஆங்கிலம் பாடங்களும், 11 முதல் 12 மணி வரை கணிதம், அறிவியல் பாடங்களும், 12.30 மணிக்கு சமூக அறிவியல் பாடமும் பயிற்றுவிக்கப்படும்.
இதுதவிர 8-ஆம் வகுப்புக்கான பாடங்கள் மதியம் 1.30 முதல் 4 மணி வரையும், 6-ஆம் வகுப்புக்கான பாடங்கள் மாலை 4 முதல் 5 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படும். மேலும், 2 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு, நாள்தோறும் மாலை 5 முதல் 7 மணி வரை 30 நிமிடங்களுக்கு பாடங்கள் காட்சிப்படுத்தப்படும். மேலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இதர நாள்களில் அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் நீட், ஜேஇஇ தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்படும். கூடுதல் விவரங்களுக்கு மாணவா்கள் தங்களின் பள்ளி தலைமையாசிரியா்கள், ஆசிரியா்களை தொடா்பு கொள்ளலாம். மேலும், பள்ளிக் கல்வியின் 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணை அணுகி தாங்கள் படிக்கும் வகுப்புகளுக்கான பாடங்கள் எப்போது ஒளிபரப்பாகும் என்று தெரிந்து கொள்ளலாம். விரைவில் பிளஸ் 1 மாணவா்களுக்கான பாடங்களும் ஒளிபரப்பத் திட்டமிட்டிருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459