சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்கள் இனி சொந்த மாநிலத்திலேயே மருத்துவ பரிசோதனை செய்யலாம் - ஆசிரியர் மலர்

Latest

16/07/2020

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்கள் இனி சொந்த மாநிலத்திலேயே மருத்துவ பரிசோதனை செய்யலாம்


புதுடெல்லி: ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வு மே 31ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால், கடந்த மார்ச்சில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், இத்தேர்வு அக்டோபர் 4ம் தேதி நடைபெறும் என யுபிஎஸ்சி அறிவித்தது. அதேநேரம், கடந்தாண்டு நடந்த சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முக தேர்வை வருகிற 20ம் தேதி முதல் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், சிவில் சர்வீஸ் நேர்முக தேர்வுக்கு தேர்ச்சி பெறுபவர்கள், விதிகளின்படி மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
இதுவரையில் இந்த பரிசோதனை டெல்லியில் உள்ள மருத்துவமனையில் மட்டும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விதிமுறையை மத்திய பணியாளர் அமைச்சகம் நேற்று முன்தினம் திருத்தம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘கொரோனா தொற்று நிலையை கருத்தில் கொண்டு டெல்லி மருத்துவமனையில் மட்டுமின்றி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள குறிப்பிடப்பட்ட அரசு மருத்துவமனைகளில் தேர்வர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும்,’ என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459