எளிமையான முறையில் தமிழ் கற்க இணைய வகுப்புகள் : மதன் கார்க்கியின் புதிய முயற்சி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

எளிமையான முறையில் தமிழ் கற்க இணைய வகுப்புகள் : மதன் கார்க்கியின் புதிய முயற்சி


எளிமையான முறையில் தமிழ் பயிற்றுவிக்கும் இணைய வகுப்புகளை  கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘பயில்’ பாடத்திட்டம் தொடங்கியுள்ளது. இந்த நிறுவனத்தை பாடலாசிரியர் மதன் கார்க்கி நடத்திவருகிறார்.
உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இணையம் மூலம் தமிழ் கற்க விரும்புவோருக்கு ஏற்றவாறு பாடத்திட்டத்தை வடிவமைத்து, அதன் அடிப்படையில் இணைய வகுப்புகளைத் தொடங்கியுள்ளனர்.அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சைப்ரஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்கள் வகுப்புகளில் இணைந்துள்ளனர். அனைத்து வயதினரும் பயிலலாம். ஒரே வகுப்பில் எட்டு வயது சிறுவர் சிறுமியரும் எழுபது வயது முதியவர்களும் ஒன்றாகக்கூடி தமிழ் படித்துவருகிறார்கள்.
தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக்கொடுப்பதை வாழ்நாள் கனவாகக் கொண்ட புலம்பெயர்ந்த தமிழர்களின் கனவு முப்பது நாட்களில் நனவாகியுள்ளது. பாடல்கள், கதைகள், ஓவியங்கள் போன்ற கலைவடிவங்களோடு ஆன்லைன் விளையாட்டுக்களின் மூலம் தமிழ் கற்பிக்கப்படுவதால், அது குழந்தைகளையும் பெற்றோரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. 

No comments:

Post a comment