கல்லூரி இறுதி ஆண்டு பருவத் தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கு : மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூஜிசி பதில் அளிக்க உத்தரவு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

கல்லூரி இறுதி ஆண்டு பருவத் தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கு : மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூஜிசி பதில் அளிக்க உத்தரவு

கல்லூரி இறுதி ஆண்டு பருவத் தேர்வை ரத்து செய்யக்கோரி அளிக்கப்பட்ட மனுவில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூஜிசி பதில் அளிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கல்லூரி இறுதி ஆண்டு பருவத் தேர்வை ரத்து செய்யக்கோரி அளிக்கப்பட்ட மனுவில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூஜிசி பதில் அளிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பெரும்பாலான மாநிலங்களில் 10 வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 12-ம் வகுப்பு தேர்வுகளில் முடிவடைந்ததால் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
பொறியியல் உள்பட அனைத்து கல்லூரி படிப்புகளில் இறுதி ஆண்டு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இறுதி ஆண்டு தேர்வை ரத்து செய்ய பல்கலைக்கழகங்கள் விரும்பவில்லை. இதுகுறித்து யுஜிசி கருத்து கேட்டது. அப்போது  பெரும்பாலான கல்லூரிகள் தேர்வை நடத்த ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் வழக்கறிஞர் ஆனந்த் பொறியியல் படிப்பு உள்பட அனைத்து பட்டப்படிப்புகளிலும் இறுதி ஆண்டு பருவத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில், கல்லூரிகள் கொரோனா தனிமைப்படுத்துதல் வார்டாக மாற்றப்பட்டுள்ளதால் கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை என்று அதில் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூசிஜி இதுகுறித்து இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a comment