தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா - மாவட்ட வாரியாக விபரம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா - மாவட்ட வாரியாக விபரம்

தமிழகத்தில் நேற்று 3 ஆயிரத்து 616 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.

சென்னை:
தமிழகத்தில் நேற்று புதிதாக 3 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 3 ஆயிரத்து 551 பேர். 
விமான நிலைய கண்காணிப்பில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 6 பேர், உள்நாட்டில் இருந்து வந்தவர்கள் 7 பேர் ஆவர்.
மேலும், சாலைமார்க்கமாக வெளிமாநிலங்களில் இருந்து சொந்த மாவட்டம் வந்தவர்களில் 52 பேர் ஆகும்.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 45 ஆயிரத்து 839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 71 ஆயிரத்து 116 பேர் குணமடைந்துள்ளனர்.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,636 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக நேற்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் – 0
செங்கல்பட்டு – 87
சென்னை – 1,203
கோவை – 36
கடலூர் – 65
தர்மபுரி – 4
திண்டுக்கல் – 7
ஈரோடு – 0
கள்ளக்குறிச்சி – 28
காஞ்சிபுரம் – 106
கன்னியாகுமரி – 119
கரூர் – 4
கிருஷ்ணகிரி – 2
மதுரை – 334
நாகை – 4
நாமக்கல் – 5
நீலகிரி – 5
பெரம்பலூர் – 0
புதுக்கோட்டை – 43
ராமநாதபுரம் – 22
ராணிப்பேட்டை – 125
சேலம் – 52
சிவகங்கை – 15
தென்காசி – 62
தஞ்சாவூர் – 34
தேனி – 94
திருப்பத்தூர் – 40
திருவள்ளூர் – 217
திருவண்ணாமலை – 99
திருவாரூர் – 23
தூத்துக்குடி – 144
திருநெல்வேலி – 181
திருப்பூர் – 17
திருச்சி – 55
வேலூர் – 117
விழுப்புரம் – 1
விருதுநகர் – 253
விமானநிலைய தனிமைப்படுத்தல்
வெளிநாடு – 6
உள்நாடு – 7
மொத்தம் – 3,616

No comments:

Post a comment