மருத்துவம் படிக்க தமிழகத்தை சேர்ந்த 800 மாணவர்கள் கிர்கிஸ்தான் நாட்டில் பரிதவிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

மருத்துவம் படிக்க தமிழகத்தை சேர்ந்த 800 மாணவர்கள் கிர்கிஸ்தான் நாட்டில் பரிதவிப்பு

ஈரோடு: தமிழகத்தை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் கிர்கிஸ்தான் நாட்டில் மருத்துவம் படித்து வருகின்றனர். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 10 மாணவர்களும் அடங்குவர். கொரோனா தாக்கம் காரணமாக அங்குள்ள மருத்துவ கல்லூரிகள், விடுதிகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அந்தந்த மாநில அரசுகள் தங்களது மாநில மாணவர்களை இந்தியாவிற்கு விமானம் மூலம் அழைத்து வருகிறது. ஆனால் தமிழக அரசு மட்டும் அவர்களை அழைத்து வராமல் மெத்தன போக்கினை கடைபிடித்து வருவதால் 800க்கும் மேற்பட்டோர் கிர்கிஸ்தான் நாட்டில் பரிதவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:
மத்திய அரசின் வந்தே பாரத் மூலம் கிர்கிஸ்தானில் உள்ள மாணவர்களை அந்தந்த மாநில அரசுகள் விமானங்கள் மூலம் அழைத்து வருகின்றன. இந்தியாவில் தமிழகம், அசாம் போன்ற மாநிலங்கள் மட்டும் இத்திட்டத்தை பயன்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருகின்றன. அரசின் மெத்தன போக்கால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 10 மாணவர்கள் உள்பட தமிழக மாணவர்கள் 800க்கும் மேற்பட்டோர் அங்கு அவதிப்பட்டு வருகின்றனர். கல்லூரிகளில் தேர்வுகள் முடிந்து விட்டதால், அனைத்து கல்லூரிகளும், விடுதிகளும் மூடப்பட்டுவிட்டன. கடந்த 4ம் தேதியில் இருந்து கிர்கிஸ்தான் நாட்டில் கொரோனா அதிகரித்து முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டு ஓட்டல்கள் எதுவும் கிடையாது. இதனால் தமிழக மாணவர்கள் உணவு கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே கடந்த 2 நாட்களாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a comment