எல்கேஜி, யுகேஜி குட்டீஸ்களுக்கு ஹேப்பி நியூஸ்..ஆன்லைன் கிளாஸ் கூடாது..தமிழக அரசு ஸ்டிரிக்ட் உத்தரவு! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

எல்கேஜி, யுகேஜி குட்டீஸ்களுக்கு ஹேப்பி நியூஸ்..ஆன்லைன் கிளாஸ் கூடாது..தமிழக அரசு ஸ்டிரிக்ட் உத்தரவு!


தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தனியார் பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகள்.. இது அவசியமா.. இத்தனை பிரச்சினை இருக்கே? கொரோனா லாக்டவுனால் பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதனிடையே தொலைகாட்சி மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது தொடர்பான வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆன்லைன், ஆஃப்லைன், பகுதியளவு ஆன்லைன் என 3 முறைகளில் வகுப்புகளை நடத்தலாம். வீட்டுக் கல்வி என்ற முறையில் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொலைகாட்சி மூலம் பாடம் நடத்தப்படும். 3-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வால் கல்வியை பாதியில் கைவிடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்: திருமாவளவன் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை தொலைகாட்சி மூலம் பாடம் நடத்தப்படும். மழலையர் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிரிகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்பு குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தக் கூடாது.எந்த வகுப்பானாலும் ஆன்லைன் வகுப்புகள் 45 நிமிடங்களுக்கு மிகாமல் நடத்தப்பட வேண்டும். 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை என 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும். அது போல் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ஒரு நாளைக்கு 30 முதல் 45 நிமிடங்கள் வரை என 4 முறைக்கு மிகாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும்.

No comments:

Post a comment