காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவும் - ஒப்புக்கொண்ட உலக சுகாதார அமைப்பு - ஆசிரியர் மலர்

Latest

08/07/2020

காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவும் - ஒப்புக்கொண்ட உலக சுகாதார அமைப்பு


ஜெனீவா

காற்றில் சிறிய துகள்களில் உள்ள கொரோனா வைரஸ் மக்களை தாக்குகிறது என்பதற்கான ஆதாரங்களை 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள் ஆதாரத்துடன் உலக சுகாதார அமைப்புக்கு கடிதம் எழுதி உள்ளனர். மே உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளைத் திருத்துமாறு கேட்டு கொண்டு உள்ளனர்.எவ்வாறாயினும், வைரஸ் காற்றில் உள்ள துகள் மூலம் பரவுவதற்கான சான்றுகள் நம்பத்தகுந்ததாக இல்லை என்று சுகாதார நிறுவனம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவலுக்கான ஆதாரங்களை உலக சுகாதார அமைப்பு  ஒப்புக் கொண்டு உள்ளது, 

“கொரோனாவை பரப்பும் முறைகளில் ஒன்றாக காற்றின் மூலம் பரவுதல் மற்றும் ஏரோசல் பரவுதல் பற்றி பரிந்துரைகளை வழங்க நாங்கள் ஆலோசித்து  வருகிறோம்” உலக சுகாதார அமைப்புன் கொரோனா வைரஸ்  தொற்றுநோய்க்கான தொழில்நுட்ப நிபுணர் மரியா வான் கெர்கோவ் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459