+2 மறுத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் - அமைச்சர் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

+2 மறுத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் - அமைச்சர்


12-ம் வகுப்பிற்கு 27-ம் தேதி நடைபெறும் மறுத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-
12-ம் வகுப்பிற்கு 27-ம் தேதி நடைபெறும் மறுத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.
தனியார் பள்ளிகளின் உரிமம் புதுப்பிப்புக் காலம், ஊரடங்கை கருத்தில் கொண்டு ஓராண்டில் இருந்து 2 ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் 6 ஆயிரத்து 19 பள்ளிகளில் இலவச கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. செல்போன் மற்றும் கணினி வழியாக பாடங்களை பதிவிறக்கம் செய்து படிக்கும் நிலை 2 ஆண்டுகளில் உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a comment