தமிழகத்தில் இன்று (ஜூலை 26) ஒரே நாளில் 6,986 பேருக்கு கொரோனா பாதிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழகத்தில் இன்று (ஜூலை 26) ஒரே நாளில் 6,986 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 26) ஒரே நாளில் 6,986 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 85 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 6,986 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 6,911 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 75 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 116 ஆய்வகங்கள் (அரசு-58 மற்றும் தனியார் 58) மூலமாக, இன்று மட்டும் 64,129 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 23 லட்சத்து 51 ஆயிரத்து 463 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று கொரோனா உறுதியானவர்களில், 4,215 பேர் ஆண்கள், 2,771 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,29,768 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 83,932 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,471 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 526 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 85 பேர் உயிரிழந்தனர். அதில், 36 பேர் தனியார் மருத்துவமனையிலும், 49 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3,494 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,703 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 10,691 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1,76,555 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 26 ஆயிரத்து 477 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a comment