+2 முடித்த பழங்குடியின மாணவர்கள் ஆசிரியர் பணியில் சேர அரசு உதவித்திட்டம் - விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2020 - ஆசிரியர் மலர்

Latest

18/07/2020

+2 முடித்த பழங்குடியின மாணவர்கள் ஆசிரியர் பணியில் சேர அரசு உதவித்திட்டம் - விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2020

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயிலும் 100 பழங்குடியின மாணவ / மாணவியர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி பெற்றவுடன் , அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் கல்வியியல் பட்டயப்படிப்பில் ( D.T.Ed. , ) சேர்த்து அவர்கள் அப்பட்டயப்படிப்பை முடித்த பின் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் ( Tamil Nadu Teachers Eligibility Test ) வெற்றி பெற தனியார் பயிற்சி நிலையங்களில் சேர்த்து , அத்தகுதித் தேர்வில் வெற்றி பெறும் பழங்குடியின இடைநிலை ஆசிரியர்கள் தர வரிசை அடிப்படையில் இத்துறையின் கீழ் இயங்கும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடத் தொடக்கப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது , என இத்திட்டத்தின் கீழ் 100 மாணாக்கர் கல்வியியல் பட்டயப் படிப்பு பயில்வதற்கு ஆகும் கல்விக் கட்டணம் , புத்தகக் கட்டணம் , விடுதிக் கட்டணம் , சீருடைக் கட்டணம் , இதரச் செலவினங்கள் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற தனியார் பயிற்சி நிலையங்களில் ஏற்படும் செலவினங்கள் முழுவதையும் அரசே ஏற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2019-2020 ஆம் ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதால் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர் / மாணவியர்களுக்கு பெறப்பட்ட தொகுப்பு மதிப்பெண் பட்டியலின் ( Consolidated Mark Statement ) அடிப்படையில் மேற்கண்ட திட்டத்தின் விவரங்களை தங்கள் மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பழங்குடியினர் மாணவர்களுக்கு தெரிவித்தும் மற்றும் பள்ளியின் விளம்பர பலகையில் அறிவிப்பு செய்யுமாறும் , விருப்பமுள்ள பழங்குடியினர் மாணவர்களிடமிருந்து விருப்ப கடிதம் ( Willingness ) பெற்று இம்மாத 31.07.2020 குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459