10 ஆண்டுகளுக்கும் குறைவாக பணியாற்றியவர்களுக்கும் ஓய்வூதியம் - ஆசிரியர் மலர்

Latest

16/07/2020

10 ஆண்டுகளுக்கும் குறைவாக பணியாற்றியவர்களுக்கும் ஓய்வூதியம்


பத்து ஆண்டு காலத்திற்கும் குறைவாக சேவை புரிந்த இராணுவப் படை பணியாளர்களுக்கும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
முன்னதாக, 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான காலத்திற்கு பணியாற்றியவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இயலாமை காரணமாக இராணுவச் சேவையை விட்டு வெளியேறும் இராணுவப் படை பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது இராணுவ சேவையின் காரணமாக நேரிட்ட அல்லது மோசமாகிவிட்ட இயலாமை அல்ல, ஏற்றுக்கொள்ளப்படும் இயலாமையாகும். இந்த ஓய்வூதியத் திட்டத்திற்குப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். 4.1.2019 தேதியன்று அல்லது அதற்குப் பிறகு இராணுவ படைப் பிரிவில் உள்ள மற்றும் பணியாற்றிய பணியாளர்களுக்கு இந்த நன்மை கிடைக்கும்.
முன்னதாக, 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான காலத்திற்கு பணியாற்றியவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
முன்னதாக, 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான காலத்திற்கு பணியாற்றியவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. 10 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் பணியாற்றியவர்களுக்கு இயலாதவர்களுக்கான கிராஜுவிட்டி தொகை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
இராணுவச் சேவை காரணமாக அல்லாமல் பிற உடல் நோய் அல்லது மனநோய் காரணமாக இராணுவப் படைப்பிரிவில் இருந்து வெளியேறும் இராணுவப்படைப் பணியாளர்களுக்கு, அவர்கள் 10 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் பணியாற்றி இருந்தாலும், அவர்களுக்கு இந்த ஓய்வூதியம் வழங்கப்படும். இராணுவச் சேவையிலும் இனி பணிபுரிய முடியாது; வேறு மறு வேலைவாய்ப்பிலும் ஈடுபட முடியாது என்ற அளவிற்கு பாதிக்கப்பட்ட இராணுவப்படை பணியாளர்கள் இதனால் பயன்பெறுவார்கள். பொருளாதார ரீதியாகவும் அவர்கள் பலனடைவார்கள்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459