Google pay பரிவர்த்தனையில் விதிமீறல் நடைபெறுகிறதா ? - ஆசிரியர் மலர்

Latest

25/06/2020

Google pay பரிவர்த்தனையில் விதிமீறல் நடைபெறுகிறதா ?


கூகுள் பே’ பரிவர்த்தனையில் எந்த விதிமீறலும் இல்லை நீதிமன்றத்தில் ஆர்பிஐ விளக்கம் 

‘‘கூகுள் பே என்பது ஒரு செயலியை அளிக்கும் 3-ம் தரப்பு சேவை நிறு வனம் மட்டும்தான்’’ என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது. பணப் பரிவர்த்தனைக்கென தனி சிஸ்டம் எதையும் அது உருவாக்கி செயல்படுத்தவில்லை என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது
. எனினும் பணப் பரிவர்த்தனை சட்டம் 2007-ன் படி அது செயல்படுவ தாகவும், எத்தகைய விதி மீறலும் இல்லை எனவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

 உரிய அங்கீகாரம் பெறாமல், ‘கூகுள் பே’ செயல்படுவதாக பொது நல வழக்கு ஒன்றை நிதி பொருளா தார அறிஞர் அபிஜித் மிஸ்ரா தாக் கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.என்.படேல், பிரதீக் ஜலான் ஆகியோர் அடங் கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது
.

இதில் ரிசர்வ் வங்கி சார் பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.கிரி, ‘‘கூகுள் பே பணப் பரிவர்த் தனை மேற்கொள்ள உதவும் செயலி. அது விதிமீறல் எதையும் செய்யவில்லை’’ என்றார். மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாயல் பாஹல், பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள ரிசர்வ் வங்கியின் அங்கீகாரத்தை கூகுள் பெறவில்லை என்று குறிப்பிட்டார். இதுதொடர்பான விரிவான விசாரணை ஜூலை 22-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459