credit card கடனை திருப்பி செலுத்துவது எப்படி? - ஆசிரியர் மலர்

Latest

29/06/2020

credit card கடனை திருப்பி செலுத்துவது எப்படி?


"நகர்ப்புறங்களில் வாழும்  பிரிவைச் சேர்ந்த மனிதர்களில் பலரும் கிரெடிட் கார்டு கடனில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள்.
ரூ.30000-க்குமேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு கிரெடிட் கார்டைத் தேடி வந்துகொடுப்பதால், எல்லோரும் இதைப் பயன்படுத்திக் கடன் வாங்கிவிடுகின்றனர். கொரோனா நாள்களுக்குப் பிறகு, கிரெடிட் கார்டு செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. கிரெடிட் கார்டின் மூலம் ஷாப்பிங் செய்வதை முழுமையாகத் தவிர்த்துவிடுங்கள்.
இன்றைய நிலையில், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கிரெடிட் கார்டு தரும் கெடு நாள்களுக்குள் வாங்கிய பொருள்களுக்கான தொகையைக் கண்டிப்பாகச் செலுத்திவிடுவது அவசியம்” என்கிறார் நிதி ஆலோசகர் யூ.என்.சுபாஷ்.
“இருப்பதிலேயே வட்டி அதிகமுள்ள கடன் என்றால் அது கிரெடிட் கார்டு கடன்தான். அடுத்தது தனிநபர் கடன். இவ்விரு கடன்களை வைத்திருப்பவர்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் முடித்துவிடுவது நல்லது
. ஏனெனில் கடனில் சாதாரண வட்டி விகிதத்தைத் தாண்டி, மறைமுக வட்டி வசூலிக்கப்படுகிறது. இதிலிருக்கும் சூட்சுமத்தைத் தனிநபர்களால் புரிந்துகொள்ள முடியாது.
இதுமாதிரியான கடன்களிலிருந்து தப்பிக்க ஒரே வழி, நம்மிடமிருக்கும் சொத்து அல்லது முதலீட்டுப் பத்திரங்களை அடமானம்வைத்து கடன் தொகையைச் செலுத்தி முடிப்பது.
குறிப்பாக, தங்க நகையை அடமானம் வைத்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக்கொண்டு இந்தக் கடன்களைச் செலுத்தி முடியுங்கள். மேலும், உங்கள் நிதி சார்ந்த முதலீடுகளான பங்குகள் மற்றும் ஃபண்ட் யூனிட்டுகளை அடமானம் வைப்பது அல்லது விற்பது, ஆயுள் காப்பீட்டு பாலிசியை அடமானம் வைத்துக் கடன் பெறுவது அல்லது முதிர்வுக்கு முன்பே சரண்டர் செய்வது ஆகிய நடவடிகைகள் மூலம் அதிக வட்டியிலான உங்கள் கடன்களைச் செலுத்தி முடிக்கலாம்
.
மேற்படி வாய்ப்புகள் எதுவும் இல்லையெனில் உங்கள் வங்கியை அணுகி, உங்கள் முந்தைய நிதிப் பரிமாற்றங்களின் அடிப்படையில் குறைவான வட்டி விகிதத்தில் கடன் கிடைக்குமா என்று கேட்டுப் பாருங்கள். இதற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகுவது நல்லது. கேட்டவுடனேயே கிடைத்துவிடாது என்றாலும், சற்று பொறுமையுடன் நடப்பது அவசியம்” என்கிறார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.
– கடன் வாங்கும்போது, ‘அடுத்த சில மாதங்களில் எப்படியாவது செலுத்திவிடலாம்’ என்று நினைத்துத்தான் வாங்குகிறோம். பிறகு, அதிலிருந்து வெளியே வர முடியாத அளவுக்குச் சிக்கலில் சிக்கி விடுகிறோம்.
கொரோனாவின் பிடியில் நம் ஒவ்வொருவரின் வீட்டுப் பொருளாதாரமும் சிக்கியிருக்கிறது. இனிவரும் காலங்களில் அதிக கடனின்றி வாழ்ந்தால்தான், சரியான பாதையில் வாழ்க்கையை நகர்த்த முடியும் என்பதை மனதில் ஆழமாகப் பதியவைத்துக் கொள்ளுங்கள். .

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459