மாணவர்கள் விடுதிகளை காலி செய்ய உத்தரவு - அண்ணா பல்கலைக்கழகம் - ஆசிரியர் மலர்

Latest

21/06/2020

மாணவர்கள் விடுதிகளை காலி செய்ய உத்தரவு - அண்ணா பல்கலைக்கழகம்

விடுதிகளை கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க அண்ணா பல்கலைக்கழகம் சம்மதம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம்
அந்தவகையில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் சிலவற்றை தனிமைப்படுத்துபவர்களுக்கான மையமாக மாற்றப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஆராய்ச்சி மாணவர்களின் விடுதியையும் தனிமைப்படுத்தும் மையமாக மாற்றுவதற்கு 20-ந்தேதிக்குள் (நேற்று) அதனை ஒப்படைக்கவேண்டும் என்று மாநகராட்சி கூறியிருந்தது.
இந்த நிலையில் அந்த விடுதிகளில் ஆராய்ச்சி மாணவர்களின் உடமைகள், ஆய்வு தொடர்பான பொருட்கள், ஆராய்ச்சி தொடர்பான கட்டுரைகள் இருப்பதால் அதனை அகற்றி ஒப்படைப்பது சற்றுசிரமம் என்பதாலும், சில மாணவர்கள் விடுதியில் இருப்பதாலும் குறுகிய காலத்தில் ஒப்படைக்க முடியாது என்று அண்ணா பல்கலைக்கழகம், சென்னை மாநகராட்சியிடம் தெரிவித்தது.
ஆனால் மாநகராட்சி எப்படியாவது ஒப்படைக்க வேண்டும் என்று மீண்டும் அறிவுறுத்தியது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் விடுதிக்கு பதிலாக ஆடிட்டோரியத்தை தர முடிவுசெய்திருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் விடுதிகளை கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க அண்ணா பல்கலைக்கழகம் சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால் விடுதிகளை காலி செய்யுமாறு மாணவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கடிதம் எழுதியுள்ளது.
மேலும், மாணவர்கள் பாதுகாப்பாக செல்வதற்கான வசதிகளை செய்யுமாறு மாநகராட்சிக்கு 
பல்கலைக்கழக துணைவேந்தர் கோரிக்கை விடுத்தார்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459