இந்தியாவின் பெயர் மாறுகிறதா ? - ஆசிரியர் மலர்

Latest

03/06/2020

இந்தியாவின் பெயர் மாறுகிறதா ?


புதுடில்லி; இந்தியாவின் பெயரை, ‘பாரத்’ என, மாற்ற கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துஉள்ளது. உச்ச நீதிமன்றத்தில், நமாஹ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:அரசியலமைப்புச் சட்டத்தில், நம் நாட்டுக்கான இந்தியா எனும் பெயர், ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்டது. இந்தியா என்று சொல்லும் போது அது, ஆங்கிலேயேர்களிடம் நாம் அடிமைப்பட்டு இருந்ததை நினைவூட்டுகிறது. அதனால், இந்தியாவின் பெயரை, பாரத் என மாற்ற வேண்டும். அது, சுதந்திரத்துக்காக போராடிய முன்னோருக்கு பெருமை சேர்க்கும் விதமாக, அவர்களின் போரட்டத்தை நினைவுபடுத்தும் விதமாக அமையும்; நாம், ஆங்கிலேயர் ஆதிக்கத்தை கடந்து விட்டோம் என்பதையும் தெரிவிக்கும்.

கடந்த, 1948-ல், அரசியலமைப்புச் சட்ட வரைவு குறித்த விவாதம் நடந்தபோது, இந்தியாவுக்கு ஹிந்துஸ்தான் அல்லது பாரத் என பெயர் வைக்க, பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்தனர். அதனால், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, இந்தியா எனும் பெயரை, பாரத் என மாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீது, நேற்று விசாரணை நடக்க இருந்தது. ஆனால், விசாரணை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459