இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல : உச்சநீதிமன்றம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல : உச்சநீதிமன்றம்


இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வழங்கப்படும் மருத்துவப் படிப்புகளுக்கு பிசி, எம்பிசி மாணவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
ஆனால் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காகத் தமிழக அரசு ஒப்படைக்கும் இடங்களில், ஐம்பது சதவீத இட ஒதுக்கீட்டு முறையை மத்திய அரசு பின்பற்றவில்லை என்ற புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து, மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு (ஓபிசி) மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்து வருகிறது
. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக, பாமக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேபோல், புதியதாக அதிமுக சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இட ஒதுக்கீடு தொடர்பாக மனுக்கள், நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, “இட ஒதுக்கீடு என்பதை அடிப்படை உரிமையாக யாரும் கோர முடியாது”என்று அவர் தெரிவித்தார். மேலும், இட ஒதுக்கீடு உரிமைகளை வழங்காததை அரசியலமைப்பு உரிமைகளை மீறியதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறிய அவர் எப்படி பிரிவு 32ன் கீழ் வழக்கினை பதிவு செய்தீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

No comments:

Post a comment