இன்று முதல் உணவகங்கள் திறப்பு : வழிகாட்டு நெறிமுறைகள் அரசு அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




07/06/2020

இன்று முதல் உணவகங்கள் திறப்பு : வழிகாட்டு நெறிமுறைகள் அரசு அறிவிப்பு


இன்று(ஜூன் 8)-ம் தேதி முதல் உணவகங்கள், உணவு விடுதிகள் திறக்க அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் உணவகம் திறப்பு மற்றம் அதன் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 5-ம் கட்ட ஊரடங்கில் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது. உணவகங்கள், டீக்கடைகள்,முடி திருத்தகங்கள், கடைகள் திறப்பதில் மேலும் தளர்வும், நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது.
அதன்படி உணவகங்கள், டீக்கடைகள் பார்சல் மட்டுமே வழங்கவேண்டும் என்பதில் சில தளர்வுகளை அளித்து அமர்ந்து உண்ணுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உணவகங்கள் திறக்கப்படுகிறது. அதற்கான அரசு அறிவித்துள்ள வருமாறு: * உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும்.
* உணவகங்களில் நுழைவதற்கு முன் வாடிக்கையாளர்கள் கைகழுவ சோப்பு அல்லது சானிடைசர் வைத்திருக்க வேண்டும்.
* உணவகங்களில் 50 சதவிகிதம் இருக்கைகளில் மட்டுமே வாடிக்கையாளர் அமர்ந்து உணவு உண்ண அனுமதி.
* உணவகங்களில் உணவருந்தும் மேஜைகளுக்கு இடையே 1 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
* உணவகங்களில் குளிர்சாதன வசதி இருந்தாலும் அதை பயன்படுத்தக் கூடாது.
* உணவகங்களில் ஜன்னல்கள் திறக்கப்பட்டு காற்றோட்டமாக இருக்க வேண்டும்.
* உணவகங்களில் உள்ள கழிவறைகளை நாள்தோறும் 5 முறை கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.

* உணவகங்களில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட பின் நாற்காலி மற்றும் டேபிளை கிருமி நாசினி கலந்த நீரால் சுத்தம் செய்ய வேண்டும்.
* உணவகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால் கண்டிப்பாக உணவகங்களில் அனுமதிக்கக்கூடாது.
* பணியாளர்கள் அனைவரும் முககவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
* அரிசி, பருப்பு, காய்கறிகள், போன்றவை சமைப்பதற்கு முன் நன்றாக சுத்தம் செய்யப்பட வேண்டும்”.
இவ்வாறு அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459