தமிழகத்தில் மாவட்ட நிலவரங்களுக்கு ஏற்ப லாக்டவுனை நீட்டிக்க தமிழக அரசு திட்டமென தகவல் - ஆசிரியர் மலர்

Latest

29/06/2020

தமிழகத்தில் மாவட்ட நிலவரங்களுக்கு ஏற்ப லாக்டவுனை நீட்டிக்க தமிழக அரசு திட்டமென தகவல்


சென்னை: முதல்வரை சந்தித்த பின் பிரதீப் கவுர் தலைமையிலான மருத்துவக்குழு செய்தியாளர்களை சந்தித்து பேசியது. அப்போது பேசிய அந்த குழுவினர் பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் லாக்டவுன் மட்டுமே கொரோனாவை தடுக்கும் தீர்வு அல்ல என்றும். லாக்டவுனை பரிந்துரைக்கவில்லை என்றும், கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் லாக்டவுனை தீவிரப்படுத்தலாம் என்றும் கூறினார்கள்.செய்யப்படுமா? |என்ன சொல்ல போகிறார்? கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி தொடங்கி தொடர்ந்து லாக்டவுன் அமலில் உள்ளது. எனினும் கடந்த மே மாதமும் ஜுன் மாதத்தில் முதல் இரண்டு வாரங்களும் நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன
.மண்டலத்திற்குள் செல்ல இபாஸ் தேவையில்லை, பேருந்துகள் இயக்க அனுமதி, கடைகளை வழக்கம் போல் திறக்க அனுமதி என கிட்டத்திட்ட இயல்பு நிலையை தமிழகம் எட்டியது. கர்நாடகா முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு.. பிற மாநில வாகனங்கள் பெங்களூர் வர கட்டுப்பாடு?பிற மாவட்டங்களில்ஆனால் சென்னையில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்ததால் பலரும் அச்சப்பட்டு தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு வந்தனர். இதனால் கொரோனா பாதிப்பு பிற மாவட்டங்களிலும் பரவலாக அதிகரித்தது. இந்நிலையில் ஜூன் 3வது வாரத்தில் பல மாவட்டங்களில பாதிப்பு கடுமையாக உயர்ந்தது.ஜூன் 30 வரைஇதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அறிவித்தார்.
இந்த ஊரடங்கு ஜுன் 30 வரை அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளார். இதேபோல் மதரை, தேனி, மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மேலும், மண்டலங்களுக்கு இடையிலான, பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு, நாளை நிறைவு பெறுகிறது.மருத்துவக்குழு உடன்இந்நிலையில் கொரோனா நோயை கட்டுப்படுத்த, அரசுக்கு ஆலோசனைகள் வழங்க, மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு முறையும், ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன், மருத்துவ நிபுணர் குழுவினருடன், முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தி, அவர்கள் கூறும் கருத்துகள் அடிப்படையில், ஊரடங்கு நீட்டிப்பை அறிவித்து வருகிறார்.லாக்டவுன் நீட்டிப்பாஅந்த வகையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவக்குழுவினருடன் முதல்வர் பழனிச்சாமி இன்று காலை 10 மணி முதல் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மருத்துவக்குழுவினர் பல்வேறு பரிந்துரைகளை அளித்ததாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கை எவ்வளவு நாட்கள் நீட்டிப்பது, எந்த மாவட்டத்திற்கு தளர்வுகளை அறிவிப்பது, எங்கு முழு ஊரடங்கை அமல்படுத்துவது என்பது குறித்து முதல்வர் மருத்துவக் குழுவினருடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்த கூட்டம் சற்று முன்னதாக நிறைவு பெற்றது. இதையடுத்து இக்கூட்டம் முடிந்துவிட்டதால் விரைவில் முதல்வர், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பார் என தெரிகிறது.லாக்டவுன் தீர்வு அல்லஇதனிடையே முதல்வரை சந்தித்த பின் பிரதீப் கவுர் தலைமையிலான மருத்துவக்குழு செய்தியாளர்களை சந்தித்து பேசியது. அப்போது பேசிய அந்த குழுவினர் பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் லாக்டவுன் மட்டுமே கொரோனாவை தடுக்கும் தீர்வு அல்ல என்றும், லாக்டவுனை பரிந்துரைக்கவில்லை என்றும் கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் லாக்டவுனை தீவிரப்படுத்தலாம் என்றும் கூறினார்கள். சென்னையை தவிர மற்ற பகுதிகளிலும் பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று அரிசிடம் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே தமிழகத்தில் மாவட்ட வாரியான பாதிப்பை பொறுத்து கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று மருத்துவக்குழுவில் உள்ள ஐசிஎம்ஆர் மருத்துவர் பிரதீப் கவுர் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறித்த கள நிலவரத்திற்கு லாக்டவுனை நீட்டிப்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தொற்று பாதிப்பு கடுமையாக அதிகரித்து வரும் மாவட்டங்களில் லாக்டவுன் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459