ஆன்லைன் கிளாஸ் என்றுக் கூறி இளம்பிஞ்சுகளை சிறுவயதிலேயே கொஞ்சம் கொஞ்சமாக கொல்வது வேதனையிலும் வேதனை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

ஆன்லைன் கிளாஸ் என்றுக் கூறி இளம்பிஞ்சுகளை சிறுவயதிலேயே கொஞ்சம் கொஞ்சமாக கொல்வது வேதனையிலும் வேதனை


🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

கொடுமையிலும் கொடுமை

கொரானோ ஒரு துயரம் என்றால்

ஆன்லைன் கிளாஸ் என்றுக் கூறி இளம்பிஞ்சுகளை சிறுவயதிலேயே கொஞ்சம் கொஞ்சமாக கொல்வது வேதனையிலும் வேதனை.

சில மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் LKG முதல், சில பள்ளிகளில் 3 வகுப்பு முதல் வகுப்பு.

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்பு.

இடையே ஒரு சில நிமிடங்கள் மட்டும் இடைவேளை.

கொஞ்ச நேரம் மொபைல் போனை குழந்தைகள் கையில் எடுத்தாலே Vibration, Heat, கதிர்களின் பாதிப்பு எனும் போது
9 மணி நேரம் மொபைலை மட்டுமே உற்றுப்பார்க்கும் குழந்தைகளின் கண்கள்,

9 மணி நேரம் கையில் போனை வைத்திருக்கும் போது அவர்கள் உடலில் ஏற்படும் கதிர்களின் தாக்கம்.

9 மணி நேரம் இயர்போனை காதில் மாட்டிக் கொண்டு அவர்கள் படும் வேதனை சொல்ல முடியவில்லை.

உங்களின் கொழுப்பெடுத்த பணத்தாசைக்கு பிஞ்சுகள் என்ன பாவம் செய்தன?

ஒரு மாதமோ இரண்டு மாதமோ கல்வித் தள்ளிப் போவதால் எதையும் மாணவர்கள் இழந்து விடப் போவதில்லை.

மாணவர்கள் இந்த நேரங்களில் இழந்த பாடங்களை கண்டிப்பாக நிலைமை சீரானவுடன் கிடைக்கத்தான் போகிறது.
அவர்கள் எதையும் இழக்கப்போவதில்லை.

எந்த எந்த பள்ளியில் இருந்து மொபைலை குழந்தைகள் கையில் கொடுக்காதீர்கள் எனக் கூறினார்களோ அதே பள்ளிகள் இன்று மொபைலை கையில் கொடுத்து 8-9 மணி நேரம் அமரச்சொல்கிறது.


பெற்றோர்களே சிந்தியுங்கள்

கொரோனாவை விடக் கொடியது இந்த மொபைல் போன் அதுவும் Earphone உடன்.

இதற்கு அரசுதான் தீர்வு கூறவேண்டும்

அல்லது

கொரோனா சீராகவிடும்
ஆனால்
Lock down முடியும் முன்பே பல லட்சக்கணக்கான மாணவர்களின் கண் காது மனநிலை அனைத்தும் பாதிக்கப்போவது நிச்சயம்.

10, 12, கல்லூரி மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 முதல் 3 நேரம் அனுமதிக்கலாம்.

அதற்கே கீழ் வகுப்பிற்கு இப்படியான முறை பரிதாபம், கொடூரம், வேதனை.

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

No comments:

Post a comment