இன்றைய ராசிபலன் - ஆசிரியர் மலர்

Latest

26/06/2020

இன்றைய ராசிபலன்


மேஷம்

மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். உறவினர்களின் அன்பு தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்கு வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் நாள்.



ரிஷபம்

ரிஷபம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் வேலைகளை சுறுசுறுப்பாக முடிப்பீர்கள்.  உயர்வு பெறும் நாள்


மிதுனம்

மிதுனம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வாகன வசதிப்பெருகும்.
வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி சில
சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்ததை முடிக்கும் நாள்.


கடகம்

கடகம்: பகல் 12.26 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் குடும்பத்தில் அமைதி நிலவும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மனநிறைவு கிட்டும் நாள்.


சிம்மம்

சிம்மம்: பகல் 12.26 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் புது முயற்சியை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.


கன்னி

கன்னி: நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள்.
பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். போராடி வெல்லும் நாள்.


துலாம்

துலாம்: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். பிள்ளைகளின் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். சிறப்பான நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பழைய உறவினர் நண்பர்களை சந்திப்பீர்கள். நம்பிக்கைக்கு உரியவர்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் ஒரு பெரிய பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


தனுசு

தனுசு: பகல் 12. 26 மணி வரை சந்தி ராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துப் போகும்.
பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சியுடன் செயல்பட வேண்டிய நாள்.


மகரம்

மகரம்: பகல் 12 .26 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்கள் பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும்.  உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.


கும்பம்

கும்பம்: கடினமான காரியத்தையும் எளிதாக முடிப்பீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.
ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் வலியவந்து உதவுவார்கள். அறிவுத்திறன் வெளிப்படும் நாள்.


மீனம்

மீனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். சிறப்பான நாள்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459