நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்ட கல்லூரி : தரவரிசையில் டாப் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்ட கல்லூரி : தரவரிசையில் டாப்


தமிழ்நாட்டின் வேலூரில் அமைந்துள்ள
கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி
1900ஆம் ஆண்டு நர்சிங் பள்ளியாக தொடங்கப்பட்டது. தற்போது எம்.பி.பி.எஸ், நர்சிங் உள்பட 179 வகையான படிப்புகள் இங்கு கற்றுத் தரப்படுகிறது
. இந்தியாவின் தலைசிறந்த மருத்துவமனைகளில் ஒன்றான இதனை நிறுவியவர் ஐடா சோபியா ஸ்கட்டர் ஆவார்.
அதிகளவிலான பெண்கள் மருத்துவர்களாக வேண்டும் என்ற நோக்கத்தில், தொடக்க காலத்தில் 100 சதவீத இடங்களையும் பெண்களுக்கே அளித்து வந்த இந்த
மருத்துவக் கல்லூரி
, 1947ஆம் ஆண்டுக்கு பின்னர் இருபாலாரும் பயிலும் கல்வி நிறுவனமாக மாற்றப்பட்டது. இங்கு நடத்தப்படும் அனைவருக்கும் பொதுவான நுழைவுத்தேர்வு முறை மிகவும் பிரபலமானது.
இதனை உலகில் உள்ள பிரபலமான கல்வி நிறுவனங்கள் பின்பற்றுகின்றன.
அடித்தட்டு மக்களுக்கான மருத்துவர்களை உருவாக்குவதே ஒரே பணி என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வரும் சி.எம்.சி மருத்துவ கல்லூரி, ஏழைகளுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுள்ள மருத்துவ மாணவர்களை தேர்வு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என
நீட்
நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்ட போது உச்ச நீதிமன்றத்தை நாடியது. நீட் தேர்வுக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்ததும் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைதான். இந்த நிலையில், சிறந்த மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கான மத்திய அரசின் தரவரிசை பட்டியலில்
வேலூர்
கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி 3ஆவது இடம் பிடித்துள்ளது.
மருத்துவ கல்வி தரத்திற்காக நீட் தேர்வில் இருந்து விலக்கு கொடுங்கள் என இந்த கல்லூரி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சிறந்த மருத்துவ கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 3ஆவது இடத்தை வேலூரி
சி.எம்.சி.
மருத்துவக் கல்லூரி
மருத்துவமனை
பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. Please cancel the NEET exam due to the corona . We are very disappointed due to the tough situation. Pls consider this as request.

    ReplyDelete
  2. Please cancel the NEET exam pls sir

    ReplyDelete
  3. Please cancel the NEET exam.... Bcoz this is the hardest situation to prepare the exam ...we couldn't get a perfect guide in this time

    ReplyDelete