இன்றைய ராசிபலன் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

இன்றைய ராசிபலன்


மேஷம்

நட்பு வட்டம் விரியும்அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். புதுவேலை கிடைக்கும்.வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். தாயாருக்கு கை கால் வலி வந்து போகும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.

ரிஷபம்

 தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும்.  உத்தியோகத்தில் உயரதிகாரி பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.


மிதுனம்

 கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் ஏற்படும் நாள்.


கடகம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும் பத்தாரை குறைகூறி கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் ஒன்று பேசப்போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். உத்தியோகத்தில்உயர் அதி காரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.


சிம்மம்

ஒரே விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் சகஊழியர்களால் சங்கடங்கள் உருவாகும். போராடிவெல்லும் நாள்.


கன்னி

 எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். சிறப்பான நாள்.


துலாம்


 உங்களின் அணுகு முறையை மற்றவர் ரசனைக்கு ஏற்பமாற்றி கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். நன்மை நடக்கும் நாள்.



விருச்சிகம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் அனைத்தும் இனிதே முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் வேண்டா வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. உங்களை யாரும் கண்டு கொள்வதில்லை என்று ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம்வந்து நீங்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.


மகரம்

மகரம்: உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். திருமண விஷயங்கள் சாதகமாக முடியும். வாகனத்தை சரிசெய்வீர்கள்.  மனைவி வழியில் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபத்தை பெருக்குவீர்கள்.
உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு உதவி செய்து நற்பெயர் பெறுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.



கும்பம்

கும்பம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லி தருவார். தொட்டது துலங்கும் நாள்.


மீனம்

மீனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்

No comments:

Post a comment