10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க மறுப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க மறுப்பு


மதுரை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க கோரிய மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 15-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இத்தேர்வை தள்ளி வைக்க கோரி தென்காசியை சேர்ந்த கனகராஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் கருத்து, மனுதாரர் கூறியபடி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமே பிரச்னை உள்ளது. எனினும் தேர்வை ஒத்தி வைப்பது மாணவர்களுக்கு மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும், மாணவர்கள் நலன் கருதியே 10-ம் வகுப்பு தேர்வு நடத்தும் முடிவை அரசு எடுத்துள்ளது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a comment