ரூபாய் 103 க்கு இந்தியாவில் அறிமுகமான கொரோனா மாத்திரை - ஆசிரியர் மலர்

Latest

22/06/2020

ரூபாய் 103 க்கு இந்தியாவில் அறிமுகமான கொரோனா மாத்திரை

மும்பை :  மிதமான மற்றும் லேசான கொரோனா பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க, ‘ஃபேவிஃபிராவிர்’ என்ற தடுப்பு மருந்துக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதனை பயன்படுத்த  தமிழக அரசு  தயக்கம் காட்டி வருகிறது. மும்பையை சேர்ந்த கிளென்மார்க் மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக ‘பெவிபிரவர்’ மருந்தை அறிமுகம் செய்துள்ளது. ‘பெபிப்ளூ’ என்ற பிராண்ட் பெயரில் வெளியிடப்படும் இது, விரைவில் மருத்துவமனைகள், மருந்தகங்களில் கிடைக்கும். 34 மாத்திரைகள் கொண்ட ஒரு பட்டையின் விலை 3,500. ஒரு மாத்திரையின் (200 மிகி) விலை ரூ. 103.
இதை மிதமான, லேசான பாதிப்புள்ள கொரோனா நோயாளிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மூலிகை தாவரத்தின் சத்துக்களை கொண்டு இது தயாரிக்கப்படுகிறது
.இந்த மாத்திரையை பயன்படுத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும் ‘ஃபேவிஃபிராவிர்’  மருந்தை பயன்படுத்த தமிழக அரசு தயக்கம் காட்டி வருகிறது. தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள ‘ஃபேவிஃபிராவிர்’ மாத்திரைக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் அனுமதி வழங்கியுள்ள போதிலும், ஐசிஎம்ஆர் அனுமதி அளிக்காதது இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,
இது குறித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ”ஃபேவிஃபிராவிர்’ மாத்திரைக்கு ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கவில்லை. ஐசிஎம்ஆர் விதிகளை பின்பற்றியே தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே ஐ.சி.எம்.ஆர் அனுமதி கொடுத்த பின்பே ‘ஃபேவிஃபிராவிர்’ மாத்திரையை தமிழகத்தில் கொள்முதல் செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். அதோடு மட்டுமல்லாமல் ‘ஃபேவிஃபிராவிர்’ மாத்திரையின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அவற்றிற்கெல்லாம் விரிவான விடை கிடைத்த பின்னரே, ஃபேவிஃபிராவிர்’ மாத்திரையை பின்பற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும். இது குறித்து முதல்வர் பழனிசாமியிடம் ஆலோசனை நடத்தி அதற்கேற்ப செயல்படுவோம் ‘, என்றார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459