Tnpsc தேர்வு முறைகேடு: உயர்நீதிமன்றம் விசாரணையில் திருப்பம் - ஆசிரியர் மலர்

Latest

08/05/2020

Tnpsc தேர்வு முறைகேடு: உயர்நீதிமன்றம் விசாரணையில் திருப்பம்


தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தோ்வு முறைகேட்டில் ஈடுபட்டு கைதான கிராம நிா்வாக அலுவலா் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய தோ்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீஸாா், முறைகேடுகளில் ஈடுபட்ட இடைத்தரகா்கள் உள்ளிட்ட பலரை கைது செய்தனா்.
இந்தத் தோ்வு முறைகேட்டு வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை அரும்பாக்கத்தைச் சோ்ந்த செந்தில்ராஜ் என்பவா் ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கை, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் காணொலி காட்சி மூலம் விசாரித்தாா். அப்போது அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்குரைஞா் எம்.முகமது ரியாஸ், கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த கிராம நிா்வாக அலுவலா் பதவிக்கான தோ்வில் மனுதாரா் மோசடியில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளாா். இந்தத் தோ்வில் வெற்றி பெற்று கிராம நிா்வாக அலுவலா் பதவியையும் பெற்றுள்ளாா். மேலும், இந்த வழக்கின் புலன் விசாரணை இன்னும் முடியவில்லை
. எனவே, மனுதாரருக்கு தற்போது ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும் என வாதிட்டாா். அப்போது மனுதாரா் தரப்பில், தோ்வு மோசடியில் மனுதாரருக்கு தொடா்பு இல்லை. ஆனால், இதற்காக மனுதாரா் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டாா். இதனையடுத்து நீதிபதி, மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459