கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்ததன் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பள்ளி – கல்லூரிகள் மூடப்பட்டது. மேலும், நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் இரத்து செய்ப்பட்டும், தள்ளிவைத்து அறிவிக்கப்பட்டது.
தமிழக அரசு அரசு பணியாளர்களின் ஓய்வு பெரும் வயதை உயர்த்தி அறிவித்தது.
ve="true">
இதனால் இந்த வருடத்திற்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் ரத்தாகும் என்ற வதந்தி பரவியது. இதனால் தேர்வு எழுதவிருந்த அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்த நிலையில், வதந்தியை முற்றிலும் மறுத்துள்ள டி.என்.பி.எஸ்.சி, தேர்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இது குறித்து டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில், டி.என்.பி.எஸ்.சி நடத்தும் எந்த தேர்வும் இரத்து கிடையாது. திட்டமிட்டபடி அனைத்து தேர்வும் நடத்தப்படும். அரசு ஊழியரின் ஓய்வு பெரும் வயது நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளதால், டி.என்.பி.எஸ்.சி தேர்வு இரத்து என்று வெளியான
ve="true">
தகவல் உண்மை இல்லை.
2020 வருடத்துக்கான குரூப் 1 முதல் குரூப் 4 தேர்வுகள் அட்டவணைப்படி திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், வரும் வருடத்தில் அரசு சமர்ப்பிக்கும் காலியிடத்திற்கான எண்ணிக்கையை பொறுத்து தேர்வு அட்டவணை வெளியாகும். நடப்பு வருடத்தில் தேர்வு எழுத காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு எந்த விதமான பிரச்சனனையும் இல்லை, தேர்வர்கள் எந்த விதமான அச்சமும் இன்றி தேர்வுக்கு தொடர்ந்து தயாராகலாம் என்று தெரிவித்துள்ளது..