PM- CARES பொது அமைப்பு அல்ல. : RTI சட்டத்தின் வரம்பிற்குள் வராது: மாணவன் கேள்விக்கு பிரதமர் அலுவலகம் விளக்கம் - ஆசிரியர் மலர்

Latest

31/05/2020

PM- CARES பொது அமைப்பு அல்ல. : RTI சட்டத்தின் வரம்பிற்குள் வராது: மாணவன் கேள்விக்கு பிரதமர் அலுவலகம் விளக்கம்


டெல்லி: கடந்த 28-ம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் போருக்கு நன்கொடை வழங்க அனைத்து தரப்பு மக்களும் விருப்பம் தெரிவித்தனர். அந்த உணர்வை மதிக்கும் வகையில், குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த  PM-CARES நிதியத்திற்கு பொதுமக்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டார். இதனை தொடர்ந்து,
சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், PM-CARES   நிதியத்திற்கு பணம் செலுத்திய வண்ணம் உள்ளனர்.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நிவாரணம் பெற பிரதமர் நரேந்திர மோடி புதிய கணக்கை தொடங்கியது ஏன்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.
PMNRF  என்ற பழைய கணக்கை பயன்படுத்தாமல் PM CARES என்ற கணக்கை தொடங்கியது ஏன்? PMNRF என்ற பெயரை PM CARES என மாற்றி இருக்கலாம்; புதிய கணக்கு தொடங்கி இருக்க தேவையில்லை. PMNRF- இன் செலவு கணக்குகளில் வெளிப்படைத்தன்மை இருக்கும்; புதிய கணக்கில் வெளிப்படைத்தன்மை சந்தேகமே என்று புகார் தெரிவித்தது.
இந்நிலையில், அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஹர்ஷா கந்துகுரி அவசரகால நிவாரணம் மற்றும் குடிமக்களுக்கு வழங்கப்படும் உதவி தொடர்பாக விவரங்களை அளிக்கும் படி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கோரிக்கை வைத்து விண்ணப்பித்துள்ளார். குறிப்பாக அந்த மனுவில் பிஎம் கேர்ஸ் உருவாக்கப்பர்ரர்கற்காக குறிக்கோள் என்ன? அதன் செயல்பாடுகள் என்ன? என அவர் கேள்வி எழுப்பியிருந்திருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் அனுப்பட்ட விண்ணப்பத்திற்கு 30 நாட்கள் ஆனபோதும் எந்த பதிலும் அரசு அளிக்கவில்லை என ஹர்ஷா கந்துகுரி மேல்முறையீடு செய்திருந்தார்.
அவர் மேல்முறையீடு செய்த பின்னர் பிரதமர் அலுவலகம் தகவல் அனுப்புள்ளது. அந்த தகவலில், “தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் படி பிஎம் கேர்ஸ் நிதி ஒரு பொது அமைப்பு அல்ல” . பி.எம் கேர்ஸ் மூலம் பெறப்படும் நிதி குறித்த கணக்கை இவர்கள் யாரிடமும் காட்டவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இது ஒரு தனியார் சேரிட்டபிள் டிரஸ்ட். இது தனியார் நிதி என்பதால் RTI எனப்படும் தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள்ளும் வராது எனக் கூறப்பட்டது.
மேலும் தகவலுக்கு pmcares.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிதி மத்திய தணிக்கை குழு (CAG)யின் வரம்புக்கு வெளியே இருப்பதால் அரசின் எந்த தணிக்கையாளர்களும் இந்த நிதி செலவழிக்கப்படும் விதத்தைக் கேள்வி கேட்கவே முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் பிஎம் கேர்ஸ் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு முறையாக பதில் தர மறுக்கிறது. எனவே இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஹர்ஷா கந்துகுரி தெரிவித்துள்ளார். பி.எம் கேர்ஸ்க்கு பிரதமர் மோடி தலைவராகவும், மூன்று அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக ஒரு அமைப்பை பற்றி கேள்வி எழுப்பினால் பொது அமைப்பு அல்ல என கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நிதி தொடர்பாக வெளிப்படை தன்மையுடன் அரசு செயல்பட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459