மாணவர் மனநிலை அறிய செயலி - ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

மாணவர் மனநிலை அறிய செயலி - ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு


பொள்ளாச்சி:மாணவர்களின் எதிர்பார்ப்பு, மனநிலை உள்ளிட்ட விபரங்களை கண்டறிய, குழந்தை நேய கூட்டமைப்பு சார்பில், மொபைல் செயலி துவங்கப்பட்டுள்ளது.குழந்தை நேய பள்ளிகளுக்கான கூட்டமைப்பு, மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன் கூறியதாவது:ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) உடன் சேர்ந்து, மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செயலி முதல் பக்கத்தில் ஆசிரியரின் பெயர், பள்ளியின் பெயர், நகராட்சி, ஒன்றியம், மாவட்டம், தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களை பதிவிட்டு செயலிக்குள் செல்லவேண்டும். 

ஊரடங்கு காலத்தில் எத்தனை சதவீத குழந்தைகளை நேரடியாக, மொபைல் போனில் தொடர்பு கொள்ள முடிந்தது;
பாடம் தொடர்பான உரையாடல் ஏதேனும் நிகழ்த்த முடிந்ததா, ஆசிரியர்களிடம் குழந்தைகளின் எதிர்பார்ப்பு என்ன, தொடர்பு கொண்ட போது கிடைத்த வேறுபட்ட அனுபவம் என்ன என்றும்; பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்ற வினாக்கள் கேட்கப்பட்டுஉள்ளன. 


kk5


No comments:

Post a comment