தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக இன்று ஓரே நாளில் 817 பேர் கொரோனாவால் பாதிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக இன்று ஓரே நாளில் 817 பேர் கொரோனாவால் பாதிப்பு


சென்னை,
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக இன்று ஓரே நாளில் 817 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன்முலம் தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 17,728 இல் இருந்து 18,545 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,645 இல் இருந்து 12,203 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 567 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 8,500 பேர் கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a comment