கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆயுர்வேத மருந்துகள் பரிசோதனைகள் துவக்கம் - ஆசிரியர் மலர்

Latest

14/05/2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆயுர்வேத மருந்துகள் பரிசோதனைகள் துவக்கம்


புதுடில்லி:கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவின் ஆயுர்வேத மருந்துகள் மூலம் குணப்படுத்த பரிசோதனைகள் துவங்க உள்ளதாக ஆயுஷ் துறை இணை அமைச்சர் கூறி உள்ளார். கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் , மருந்து தயாரிப்பு நிறுவனங்களும், மருந்துகளை கண்டறிய முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய ஆயுஷ் துறையின் இணை அமைச்சர் ஸ்ரீபாத்நாயக் கூறியதாவது:
இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், யுனானி, சித்தா, மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றின் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும். இதற்கான சோதனைகள் ஒரு வாரத்திற்குள் துவங்கும். இதற்காக ஆயுஷ் அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்
(சி.எஸ்.ஐ.ஆர்) இணைந்து செயல்பட்டு வருகின்றன.
மேலும் நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை நேர்மறையான விளைவைக் காண்பிக்கும் என்றும், ‘இந்த தொற்றுநோயைக் கடப்பதற்கான வழி’ வகுக்கும் என்பதில் தான் ‘உறுதியாகவும் நம்பிக்கையுடனும்’ இருப்பதாக அமைச்சர் நாயக் கூறினார்.
இதனிடையே சி.எஸ்.ஐ.ஆர் இயக்குநர் ஜெனரல் சேகர் மண்டே மற்றும் ஆயுர்வேதம் மற்றும் ஆயுஷ் செயலாளர் வைத்ய ராஜேஷ் கோடெச்சா ஆகியோர் விரைவில் நல்ல முடிவு வரும் என்றனர்.
மேலும் . நவீன மருத்துவ நடைமுறைகள் வருவதற்கு முன்பே ஆயுர்வேத நடைமுறைகள் இருந்தன. எனவே, சில ஆயுர்வேதக் கொள்கைகளை நாம் சரிபார்க்க வேண்டியது அவசியம். எனவே, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தற்போதைய நேரம் முற்றிலும் சரியானது.பாரம்பரிய சீன மருத்துவ முறைகளில் சீனர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்களுடைய சில மருந்துகள் கொரோனா வைரசுக்கு எதிராக பயனுள்ளதாக இருந்ததாக அவர்கள் கூறி உள்ளனர்.
இவ்வாறு சேகர் மண்டே கூறினார்.
முன்னதாக பிரதமர் மோடி நாட்டுமக்களிடையே ஆற்றிய உரையின் போது உள்நாட்டு வணிகங்களுக்கு நமது ஆதரவை அளிக்க வேண்டும். அதற்காக குரல் கொடுக்க வேண்டும் என கூறி இருந்தார். இதனை கருத்தில் கொண்ட ஆயுஷ் துறை நமது பராம்பரிய மருத்துவ முறை மூலம் கொரோனாதொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க பரிசோதனை துவங்கப்படும் என கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது
.

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459