குடிபோதையில் நர்சிங் மாணவியை கட்டையால் அடித்துக் கொன்ற அண்ணன் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Friday, 8 May 2020

குடிபோதையில் நர்சிங் மாணவியை கட்டையால் அடித்துக் கொன்ற அண்ணன்


விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கீழ்க்கண்ட மங்கலத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டி. அவருடைய மனைவி சந்திரமதி
. இவர்களுக்கு கணேஷ் பாபு (வயது23) என்ற மகனும், மூன்று மகள்களும் உள்ளனர்.
இதில் ஒரு மகளான அம்சவள்ளி (20) ராஜபாளையத்தில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கணேஷ் பாபு லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அம்சவள்ளியும், அதே ஊரைச் சேர்ந்த ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த காதலுக்கு கணேஷ்பாபு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து கணேஷ் பாபு மது அருந்திவிட்டு போதையில் தனது தங்கை அம்சவள்ளியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஆத்திரத்தில் கணேஷ் பாபு கட்டையால் அம்சவள்ளியை கொடூரமாக தாக்கியதாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் அம்சவள்ளி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைதொடர்ந்து கணேஷ் பாபு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.