சிவப்பு மண்டல பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் தொடரும் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Friday, 1 May 2020

சிவப்பு மண்டல பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் தொடரும்


மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
விமானம், மெட்ரோ, ரெயில் போன்றவை நாடு முழுவதும் இயங்காது என்றும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் சிவப்பு மண்டல பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.title="கொரோனா வைரஸ்" width="100%" />
இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் வெளியே வரக்கூடாது.
முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள்  வீட்டை விட்டு கண்டிப்பாக வெளியே வரக்கூடாது என்று கூறி உள்ளது.
பச்சை மண்டலத்தில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்கலாம் என்றும், ஆரஞ்சு மண்டலங்களில் கார்களில் ஓட்டுநருடன் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது