பஞ்சாப் மாநில அரசை பின்பற்றி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்துசெய்ய கோரிக்கை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

பஞ்சாப் மாநில அரசை பின்பற்றி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்துசெய்ய கோரிக்கை


10.05.2020
~~~~~~~~
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து பஞ்சாப் மாநில அரசை பின்பற்றி பள்ளிகளில் நடந்த காலாண்டு அரையாண்டு மற்றும் திருப்புதல் தேர்வுகள் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சியை அறிவிக்க தமிழக அரசை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை
~~~~~~~~~~
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக மத்திய மாநில அரசுகள்
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது இந்நிலை கல்லூரி தேர்வுகள் உள்ளிட்ட பல தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது   தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தேர்வு நடைபெறாமலேயே தேர்ச்சியடைய செய்து உத்தரவிட்டது அதே போன்று பதினோராம் வகுப்பு கடைசி தேர்வையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைத்துள்ளது தேர்விற்கான அட்டவனையை இம்மாதம் இறுதியில் அறிவிப்பதாகும் ஜூன் மூன்றாம் வாரத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் தேர்வுகள்
நடைபெறும் என்று  தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். மாணவர்கள் குறைந்தது 15 நாட்களாவது பள்ளிக்கு வந்து பயின்றதை ஆசிரியர்கள் நினைவு படித்தினால் ஒழிய மாணவர்கள் தேர்ச்சி பெறுவது கடினம் குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் இவர்கள் ஏழ்மை நிலையில் இருப்பதால் இணையத்தில் படிக்க இயலாத ஒருநிலை

பள்ளிகள் திறக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பட்சத்தில் யாருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டால் அது பலருக்கு பரவ வாய்ப்புள்ளது இதனை அரசு உரணவேண்டும்

பஞ்சாப் அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தாமலேயே ஏற்கனவே பள்ளிகளில் நடந்த காலாண்டு அரையாண்டு திருப்புதல் தேர்வுகளின் அடிப்படையிலும் வருகை பதிவை கருத்தில் கொண்டு தேர்ச்சியை அறிவிக்க முடிவு செய்துள்ளது
அதனையே பின்பற்றி தமிழக அரசும் பத்தாம் மாணவர்களின் தேர்ச்சியை அறிவிக்க வேண்டும்

அதேபோன்று பத்தாம் வகுப்பு பதினோராம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே மேற்கொள்ளலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார் தமிழக அரசும் இந்த நடைமுறையை பின்பற்றி பதினோராம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும்
~~~~~~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு