வெறும் 13 நாட்கள்.. கோயம்பேடு மூலமாக இத்தனை கேஸ்களா.. அதிர வைக்கும் கொரோனா பரவல் டேட்டா! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

வெறும் 13 நாட்கள்.. கோயம்பேடு மூலமாக இத்தனை கேஸ்களா.. அதிர வைக்கும் கொரோனா பரவல் டேட்டா!


தமிழகத்தில் கோயம்பேட்டில் இருந்து மட்டும் மொத்தம் 1867 பேருக்கு இதுவரை தமிழகம் முழுக்க கொரோனா கேஸ்கள் பரவி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் தீவிரமாக கொரோனா பரவி வருகிறது. இன்றும் தமிழகத்தில் அதிக அளவில் கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6535 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு கோயம்பேடு கொரோனா பரவலும் மிக முக்கிய காரணமாகும் . 3 நாட்களுக்கு பின் வந்த ரிப்போர்ட்.. விசாகப்பட்டினம் விஷவாயு கசிவுக்கு என்ன காரணம்?.. என்ன நடந்தது?தமிழகம் முழுக்கஇந்த நிலையில் தமிழகத்தில் கோயம்பேட்டில் இருந்து மட்டும் மொத்தம் 1867 பேருக்கு இதுவரை தமிழகம் முழுக்க கொரோனா கேஸ்கள் பரவி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 27ம் தேதிதான் கோயம்பேட்டில் தமிழகத்தில் முதல் நபருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. அங்கிருக்கும் பழக்கடை வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. அவர் மூலம் பலருக்கு பரவியது.உறுதி கிடையாதுஆனால் இன்னும் அந்த பழக்கடை வியாபாரிதான் கோயம்பேடு மார்க்கெட்டின்
பேஷண்ட் '0' ஆ என்று உறுதியாக கூற முடியவில்லை. அவருக்கு முன்பே கோயம்பேடு மார்க்கெட்டில் யாருக்காவது கொரோனா பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.அங்கு கொரோனா குறித்து காண்டாக்ட் டிரேஸ் செய்வது மிகவும் கடினமான காரியமாக மாறியுள்ளது. தமிழகம் முழுக்க பலருக்கு கோயம்பேடு காரணமாக கொரோனா பரவி உள்ளது.பல மாவட்டங்கள்தமிழகம் முழுக்க சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், திருச்சி, மதுரை, அரியலூர் என்று பல மாவட்டங்களுக்கு இதனால் கொரோனா பரவி உள்ளது. ஸ்டேஜ் 2 பரவலை இந்த கோயம்பேடு தீவிரப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 20 மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர்
. மொத்தம் 1867 பேருக்கு இதுவரை கோயம்பேடு காரணமாக கொரோனா ஏற்பட்டுள்ளது.எத்தனை கேஸ்கள் வந்ததுஇதில் கவனிக்க வேண்டிய விஷயம் தமிழகத்தில் பதிவான கேஸ்களில் 29 சதவிகிதம் கோயம்பேட்டில் இருந்து வந்துள்ளது. சென்னையில் கோயம்பேட்டில் இப்படி பாதிக்கப்பட்ட பலர் அங்கு கடை வைத்திருக்கும் நபர்கள் மட்டும்தான். இவர்களும் இவர்களின் உறவினர்களுக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது. இப்போது வரை கோயம்பேடு சென்றவர்கள், அவர்களின் நெருங்கிய காண்டாக்ட்களுக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.இன்று எத்தனைகோயம்பேட்டில் கொரோனா பரவ
அங்கு போதிய கட்டுப்பாடு இல்லாததுதான் காரணம் என்கிறார்கள். மக்கள் அங்கு தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பழகி வந்தனர். வெறும் 13 நாட்களில் இத்தனை பேருக்கு கோயம்பேடு காரணமாக கொரோனா ஏற்பட்டுள்ளது . சென்னையில் மட்டும் கோயம்பேடு காரணமாக 560 பேருக்கு அதிகமானோர் பாதிக்கப்ட்டுள்ளனர். இன்று மட்டும் 278 பேருக்கு தமிழகம் முழுக்க கோயம்பேடு காரணமாக கொரோனா ஏற்பட்டுள்ளது