உருவாகிறது ஆம்பன் புயல் - ஆசிரியர் மலர்

Latest

15/05/2020

உருவாகிறது ஆம்பன் புயல்


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக மாறும் என 
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இது குறித்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று
மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக மாறும். இது நாளை புயலாக வலுப்பெறும்
. இந்த புயலுக்கு ஆம்பன் என பெயரிடப்பட்டுள்ளது.
17-ஆம் தேதி வரை வட மேற்கு திசையில் அதன் பிறகு வளைந்து வடக்கு வடகிழக்கு திசையிலும் நகரும். இதனால் வடக்கு மற்றும்
வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும். கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் காற்றின் ஈர்ப்பு காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்கள், தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல், லட்சத்தீவு குமரி கடல், தென் கிழக்கு அரபி கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்படுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459