பேஸ்புக் பிழையை கண்டுபிடித்தை மதுரை மாணவருக்கு கிப்ட் - ஆசிரியர் மலர்

Latest

31/05/2020

பேஸ்புக் பிழையை கண்டுபிடித்தை மதுரை மாணவருக்கு கிப்ட்


மதுரை: பேஸ் புக்கில் ‘ரைட்ஸ் மேனேஜர்’ என்ற பிரிவில் உள்ள பிழையை கண்டுபிடித்த மதுரை ஜெய்ஹிந்த்புரம் கல்லுாரி மாணவர் டி.கே.கிஷோரை பேஸ்புக் நிறுவனம் பாராட்டி ரூ.77 ஆயிரம் பரிசு வழங்கியது.
கிஷோர் கூறியதாவது: சென்னை கல்லுாரி ஒன்றில் பி.டெக் இறுதியாண்டு படிக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் கூகுள், மைக்ரோசாப்ட் தளங்களில் உள்ள பிழைகளை கண்டுபிடித்து பரிசு வாங்கினேன். தற்போது பேஸ்புக் ‘ரைட்ஸ் மேனஜர்’ பிரிவில் உள்ள பிழையை கண்டுபிடித்துள்ளேன். பொதுவாக பேஸ்புக்கில் ரைட்ஸ் மேனேஜர் ஆப்ஷன் இருக்கும். தேவைப்பட்டால் பேஸ்புக் மீடியா துறையை தொடர்பு கொண்டு இதை ஆக்டிவேட் செய்யலாம். ஆக்டிவேட் செய்த பின் பேஸ்புக்கில் பதிவேற்றும் வீடியோ, ஆடியோக்களை நாம் காப்பி ரைட் செய்யலாம்.
இப்படி காப்பி ரைட் செய்த வீடியோ, ஆடியோவை வேறு நபர்கள் தங்கள் பேஸ்புக் பக்கங்களில் ‘பிரைவேட்’, ‘பப்ளிக்’ என்ற பிரிவில் பதிவேற்றுவது வழக்கம். பிரைவேட் பிரிவில் பதிவேற்றும் போது, பதிவேற்றிய நபரின் விபரங்களை காப்பி ரைட் பெற்ற வீடியோ, ஆடியோ கிரியேட்டருக்கு பேஸ்புக் காட்டியது.
பிரைவேட் என்பதே பதிவேற்றியவரின் விபரங்களை காட்டாமல் இருக்க தான். ஆனால், விபரங்களை காட்டுவது பிழை. ரைட்ஸ் மேனேஜரில் உள்ள இப்பிழையை கண்டுபிடித்து நீக்க வேண்டும் என பேஸ்புக் நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தேன். பிழையை சரி செய்ததுடன் என்னை பாராட்டி ரூ.77 ஆயிரம் பரிசு வழங்கினர், என்றார்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459