தேர்வு நடைமுறைகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Monday, 18 May 2020

தேர்வு நடைமுறைகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை


சென்னை:
ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.  வெளியூர் சென்ற மாணவர்களை அழைத்து வந்து தேர்வில் பங்கேற்க செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 
ஆனால், கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ள நிலையில்
, பொதுத்தேர்வை இப்போது நடத்தக்கூடாது என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், தேர்வு நடைமுறைகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் செங்கோட்டையன் முதலமைச்சரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வருடனான சந்திப்பின்போது, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. அநேகமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.