டெஸ்ட் வேண்டாம்.நெகட்டிவ்ன்னு போட்டுக்க....தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி டீன் மாற்றப்பட்ட பின்னனி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

டெஸ்ட் வேண்டாம்.நெகட்டிவ்ன்னு போட்டுக்க....தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி டீன் மாற்றப்பட்ட பின்னனி


தற்போதைய கொரோனா வைரஸ் பரவல்காலத்தில் ஏற்கெனவே சென்னை ஸ்டான்லி, கோவை, திருச்சி மருத்துவக் கல்லூரி டீன்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, தூத்துக்குடி டீன் 4வது முறையாகப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் நாளுக்குநாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கொரோனா அறிகுறி ஆரம்ப நிலையாக இருந்தால் மருத்துவமனைக்கு வரவேண்டாம் என அரசு அறிவித்தபோதே சர்ச்சையானது
இந்நிலையில், கொரோனா பரிசோதனை செய்யாமலேயே நெகட்டிவ் ரிசல்டாகப் போட்டுக்கொள் என ஒரு மருத்துவக் கல்லூரி டீனே கூறியுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அரசு மருத்துவமனைகளில் உண்மையிலேயே கொரோனா பரிசோதனை நடைபெறுகிறதா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக டீன் திருவாசகமணியைப் பலமுறை செல்போனில் தொடர்புகொள்ள முயற்சி செய்தோம்.
அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. இதுகுறித்து RMO சைலேஷிடம் பேசினோம். “அந்த வீடியோவைப் பற்றியெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது’’ என்று சொன்ன அவர், “தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் யாருக்கும் சோதனை செய்யாமல் நெகட்டிவ் என ரிசல்ட் கொடுப்பதில்லை என்பது மட்டும் உறுதி’’ என்பதோடு முடித்துக் கொண்டார்.