உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : கொட்டி தீர்க்கப்போகுது மழை - ஆசிரியர் மலர்

Latest

 




12/05/2020

உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : கொட்டி தீர்க்கப்போகுது மழை


தமிழகத்தில் கோடை வெயிலால் நிலவி வரும் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக மழை நீடிக்கும் எனவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னயாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று, மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
மேலும் குமரி கடல், லட்சத் தீவு மற்றும் மாலத்தீவை ஒட்டி இருக்கும் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.
எனவே அப்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். அந்தமான் நிக்கோபார் பகுதியில் வரும் 16-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. அங்கு நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக் கூடும்.
சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரியாக இருக்கும். மதுரை, திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி, வேலூர் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி முதல் 105 டிகிரி வரை பதிவாகக் கூடும். அதனால் பொதுமக்கள் காலை 11.30 மணி முதல், பிறபகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459