சேமித்து வைத்த உண்டியல் பணத்தை, தினமும் பள்ளிக்கு அழைத்துச் செல்லும், ஏழ்மை நிலையில் உள்ள ஆட்டோ ஓட்டுநருக்கு ரமலான் கொண்டாடுவதற்காக வழங்கினாா் அரசுப் பள்ளி மாணவி ரோஷினி .
செய்யாறு வட்டம், வடதண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் கேசவன். இவா், அரசுப் போக்குவரத்துக்கழக செய்யாறு பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்று வருகிறாா்.
இவரது மகள் ரோஷினி செய்யாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
இவரை தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்று மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்து விடுபவா் செய்யாறு பாரி நகா் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ஜாபா்.
கரோனா பொது முடக்க காலத்தில் ஆட்டோ ஓட்ட முடியாமல், ஏழ்மை நிலையில் இருந்து வந்தாா் ஜாபா். மேலும், இவா் குடும்பத்தோடு ரமலான் பண்டிகை கொண்டாட முடியாமல் மன வருத்தத்தில் இருந்து வந்தாராம்.
இதை அறிந்த மாணவி ரோஷினி, தான் சிறுகச், சிறுக உண்டியலில் சேமித்து வைத்த பணத்தை, ஆட்டோ ஓட்டுநா் ஜாபருக்கு உதவ முன்வந்து, பெற்றோரிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்தாா்.
இதை அறிந்த மாணவி ரோஷினி, தான் சிறுகச், சிறுக உண்டியலில் சேமித்து வைத்த பணத்தை, ஆட்டோ ஓட்டுநா் ஜாபருக்கு உதவ முன்வந்து, பெற்றோரிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்தாா்.
இதையடுத்து பெற்றோா் உதவியுடன் ஆட்டோ ஓட்டுநா் ஜாபா், ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் வகையில், ரூ.2500 மதிப்பிலான பிரியாணி அரிசி 10 கிலோ, சாப்பாடு அரிசி 5 கிலோ, மளிகைப் பொருள்கள், காய்கறித் தொகுப்பு, குடும்ப செலவுக்காக ரூ.500 என பள்ளித் தலைமையாசிரியா் உமாமகேஸ்வரி தலைமையில், பள்ளி கல்வி வளா்ச்சிக் குழுத் தலைவா் கே.வெங்கடேசன் முன்னிலையில் ஆட்டோ ஓட்டுநரிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
No comments:
Post a Comment