தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரங்கராஜன் தலைமையில் குழு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரங்கராஜன் தலைமையில் குழு


சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஆலோசனை வழங்க ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தை பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஆலோசனை வழங்க,
ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரத்தில் எப்படி மீள்வது என்பது குறித்து ஆய்வு செய்து, மூன்று மாதத்திற்குள் அரசிடம் அறிக்கை அளிக்கும். 24 பேர் கொண்ட இக்குழுவில், பொருளாதார வல்லுநர்கள், தொழில்துறையினர், யுனிசெப் உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினர் இடம்பெற்றுள்ளனர்.