தமிழகத்தில் சிவப்பு ஆரஞ்சு, பச்சை நிற மாவட்டங்கள் ( முழு பட்டியல்) என்னென்ன விலக்குகள் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Friday, 1 May 2020

தமிழகத்தில் சிவப்பு ஆரஞ்சு, பச்சை நிற மாவட்டங்கள் ( முழு பட்டியல்) என்னென்ன விலக்குகள்கரோனா நோய்த் தொற்று பாதிப்பின் அளவைப் பொருத்து, நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்தையும் நிறம் பிரித்து, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மாவட்டங்களாக மத்திய சுகாதாரத் துறை இன்று பட்டியல் வெளியிட்டுள்ளது.
இந்த மாவட்டங்களின் நிறங்களைப் பொருத்தே, மே 3 ஆம் தேதி ஊரடங்கு முடிவுக்கு வர நேரும்பட்சத்தில் என்னென்ன மாதிரியான விலக்குகள் அறிவிக்கப்படும்  எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பட்டியலில் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு நிற மண்டலங்களாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு நிற மண்டலங்களாகவும், ஒரு மாவட்டம் மட்டும் பச்சை நிற மண்டலமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன
.

சிவப்பு நிற மண்டலங்கள் 
1. சென்னை 
2. மதுரை 
3. நாமக்கல் 
4. தஞ்சாவூர் 
5. செங்கல்பட்டு
6. திருவள்ளூர்
7. திருப்பூர்
8. ராணிப்பேட்டை
9. விருதுநகர்
10. திருவாரூர்
11. வேலூர்
12. காஞ்சிபுரம்
ஆரஞ்சு நிற மண்டலங்கள் 
1. தேனி
2. தென்காசி
3. நாகப்பட்டினம்
4. திண்டுக்கல்
5. விழுப்புரம்
6. கோவை 
7. கடலூர் 
8. சேலம் 
9. கரூர்
10.தூத்துக்குடி 
11. திருச்சிராப்பள்ளி
12. திருப்பத்தூர் 
13. கன்னியாகுமரி
14. திருவண்ணாமலை 
15. ராமநாதபுரம்
16. திருநெல்வேலி
17. நீலகிரி
18. சிவகங்கை
19. பெரம்பலூர்
20. கள்ளக்குறிச்சி
21. அரியலூர்
22. ஈரோடு
23. புதுக்கோட்டை 
24. தருமபுரி
பச்சை நிற மண்டலங்கள் 
1. கிருஷ்ணகிரி