மானாமதுரையில் சேமிப்பு பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு 8-ம் வகுப்பு மாணவி வழங்கியதை ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.
மாணவி சந்தியா
மானாமதுரையில் சேமிப்பு பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு 8-ம் வகுப்பு மாணவி வழங்கியதை ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரம் தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என். நடு நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி சந்தியா தனது பெற்றோர் வழங்கிய தொகையை சிறுக சிறுக சேமித்து வைத்திருந்தார் இன்று பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுருநாதனிடம் தான் உண்டியல் மூலம் சேமித்து வைத்திருந்த ரூ. 1048-ஐ கொடுத்து கொரோனா நிவாரண நிதியாக முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு இணைய தளம் மூலம் ரூ.1,048 அனுப்பி வைக்கப்பட்டது. மாணவியின் இச்செயலை ஆசிரியர்கள் பாராட்டினர்.