திருப்பூர் : தமிழக ஆசிரியர்களில், 73 சதவீதம் \'ஆரோக்ய சேது\' செயலியை பதிவிறக்கம் செய்துள்ளதாக தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.
கொரோனா ஒழிப்பு தொடர்பான, \'ஆரோக்ய சேது\' எனும் செயலியை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இச்செயலியை ஆசிரியர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் பதிவேற்றம் செய்ய, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதை உறுதிப்படுத்த, அனைத்து மாவட்டங்களிலும் நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கள் கல்வி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள், கல்வி அலுவலகர்களை
, இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வலியுறுத்துவதோடு, அதற்கான விவரங்களையும் திரட்டி வருகின்றனர். கடந்த., ஏப்., 28 வரை பதிவிறக்கம் செய்தவர்களின் தகவலை மாவட்ட வாரியாக தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கல்வி அதிகாரிகள் கூறுகையில், \'இதுவரை, 73 சதவீதம் பேர், \'ஆரோக்கிய சேது\' செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். அதிகபட்சமாக செங்கல்பட்டு, ராணிபேட்டை, திருவாரூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில், 97 சதவீதம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். \'கோவை, திருப்பூர், சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சொற்ப அளவிலே இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்\' என்றனர்.