தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா.. 3550 பேருக்கு ஒட்டுமொத்தமாக பாதிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா.. 3550 பேருக்கு ஒட்டுமொத்தமாக பாதிப்புஇதுவரை இல்லாத அளவாக, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3550 ஆக கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிக அதிகமாகி வருகிறது. நேற்று 266 பேருக்கு பரவிய நிலையில் இன்று ஒரே நாளில 527 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3550 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 527பேரில் 377பேர் ஆண்கள், 150 பேர் பெண்கள் ஆவர்.தமிழகத்தில் இன்று 12773 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் 527 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றுவரை 153489 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3550 பேரில் 2392 பேர் ஆண்கள் ஆவர். 1153 பேர் பெண்கள் ஆவர். ஒருவர் திருநங்கை ஆவார். தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 30 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
இதன் மூலம் தமிழகத்தில் குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1409 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி ஒருவர் கொரானாவால் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து சொந்த ஊர் சென்றவர்கள் மூலம் அதிக அளவு கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு இருமடங்கு ஆகி உள்ளது. சென்னை, கடலூர், அரியலூர், விழுப்புரம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.