எகிறும் கொரோனா பாதிப்பு... 2 - வது இடத்தில் தமிழகம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

எகிறும் கொரோனா பாதிப்பு... 2 - வது இடத்தில் தமிழகம்


இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81ஆயிரத்தை தாண்டி விட்டது. அதேபோல, உயிர்ப்பலியும் 2 ஆயிரத்து 631ஆக உயர்ந்துள்ளது.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில்,தமிழகம் 2- வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, நாள்தோறும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

கொரோனா பாதிப்பில் முதலிடம் வகிக்கும் மஹாராஷ்டிராவில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 600 ஐ எட்டும் நிலையில் உள்ளது. மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவியில் ஒரே நாளில் 33 பேர் பாதிக்கப்பட, 2 பேர் உயிரிழந்தனர்.

மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பில், தமிழகம் 2 - வது இடம் வகிக்கிறது. ஒரே நாளில், 447 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 674 ஆக உயர்ந்துள்ளது.3- வது இடம் வகிக்கும் குஜராத்தில், கொரோனா பாதிப்பு, 9 ஆயிரத்து 592ஆக இருக்க
, அங்கு, இதுவரை 586 பேர் பலி ஆகி இருக்கிறார்கள்.

டெல்லியை பொறுத்தவரை, 8 ஆயிரத்து 500 -ஐ நெருங்க, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசத்திலும் கொரோனா பாதிப்பு, கணிசமாக உயர்ந்துள்ளது.மேற்கு வங்காளம், ஆந்திரா, பஞ்சாப் , தெலுங்கானாவிலும் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கர்நாடகாவிலும், ஜம்மு - காஷ்மீரிலும், கொரோனா பாதிப்பு ஆயிரத்தை நெருங்க, பீஹார், ஹரியானா, ஓடிசா மாநிலங்களிலும் கணிசமாக உயர்ந்துள்ளது.கேரளாவை பொறுத்தவரை, நீண்ட நாட்களாக கொரோனா, கட்டுக்குள் இருந்தது
. ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

ஆக மொத்தம் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81 ஆயிரத்து 316 ஆக உயர்ந்தது, அதேபோல கொரோனா காவு வாங்கியோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 631ஆக அதிகரித்தது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 ஆயிரம் பேருக்கு மேல், கொரோனாவால் பாதிக்கப்பட, 26 ஆயிரத்து 235 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். 49 ஆயிரத்து 219 பேர், நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில்சிகிச்சை பெற்று வருகிறார்கள்.