கரோனா வைரஸ் தொற்று நோய் வந்த சுமார் 7,500 பேரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளைக் கொண்டு லண்டனை சேர்ந்த மரபணு ஆய்வுபல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது.
கடந்த ஆண்டு அக்டோபருக்கும் டிசம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் சீனாவில் கரோனா வைரஸ் தொற்று நோய் பரவ தொடங்கிய உடனேயே பிற உலக நாடுகளுக்கும் மிக விரைவாக பரவியது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
கரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம்தேதிக்கும் டிசம்பர் 11-ம் தேதிக்கும்இடைப்பட்ட காலத்தில் பரவஆரம்பித்துள்ளது. இதே காலத்தில்தான் வேறு உயிரினத்தில் இருந்துமனிதனுக்கும் இது பரவியிருக்கலாம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள், மரபணு ஆராய்ச்சி பத்திரிகையில் வெளியாகியுள்ளது.