உணவின்றி தவித்த மக்களுக்கு தினமும் 200 நபர்களுக்கு 22 நாட்களாக உணவு வழங்கிவரும் ஆசிரியர் கண்ணன் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

உணவின்றி தவித்த மக்களுக்கு தினமும் 200 நபர்களுக்கு 22 நாட்களாக உணவு வழங்கிவரும் ஆசிரியர் கண்ணன்ஆசிரியர் கண்ணன் வசிக்கும் ஊரான ராஜபாளையத்தில் வீதிகளில் வயதானவர்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாய் யாரையோ எதிர்பார்த்து ஏக்கத்துடன் இருப்பதைக்கண்டு அருகில் சென்று விசாரித்ததில் பசி என்பதை கேட்டறிந்தார். ஆசிரியர் நண்பர்கள் அரசு ஊழியர்களிடம் கலந்து பேசியுள்ளார்.பின் அவர்கள் ஒவ்வொறுவரும் குறிப்பிட்ட தொகையை கொடுத்து சாப்பாடு சமைத்து வழங்க முடிவெடுத்தனர்.அதனைத்தொடர்ந்து காவல்துறையிடம் அனுமதி பெற்று ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் இன்று 03.05.2020 வரை தினமும் 200 நபர்களுக்கு தேவையான உணவினை தன்னுடைய வீட்டில் குடும்பத்துடன் சமைத்து ராஜபாளையம் நகர் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் இவருடைய சேவை தொடர்கிறது.

ஒவ்வொறு நாளும் ஒரு  விதவிதமான உணவுகளை தயாரித்து வழங்குகிறார்.இவருடைய சேவையை பார்த்து பல ஆசிரியர்களுக்கு உதவி வருகின்றனர். இவரைப் போன்று தமிழகத்தில் மக்களின் துயர்துடைக்கும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் பணி போற்றுதலுக்குறியதே..
வாழ்த்துக்கள்